பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95. விக்கும். அன்பு மலரும் உள்ளங்கள் எல்லோரும் இன்புற்று இருக்கவே விரும்பும். இருண்ட மனங்கள்தான் சுயநலத்தை பெரிதுபண்ணும்” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருப்பார். பால்வண்ணம் பிள்ளைக்கு இப்போது அனுதாபமும் அன்பும் தேவை என்று உணர்ந்த பிறவிப்பெருமாள் தனது இயல்புப்படி பேசினார். பிள்ளையின் வேதனையைத் தன் பேச்சால் தனித்தார். அவருடைய மனசின் நிலைமை அறிந்து பக்குவமாய்ப் பேசினார். இருள் மண்டிய குகையாய்க் டந்த பால்வண்ணம் ன்ேளையின் உள்ளத்தில் பிறவிப் பெருமாளின் பேச்சு, ஒளி உதயம் புகுத்தியது. அவர் உணர்வுகளைத் தொட்டு புதிய சிலிர்ப்புகளை உண்டாக்கியது. ஊராரின் வெறுப்பைக்கூட அன்பான செயல்கள் மூலம் வென்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருள் சுரக்கும்படி செய்தது. ஊர் மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் மனசுக்குப்பட்டது. கோயில் திருவிழா அன்று எல்லோ ருக்கும் சாப்பாடு வழங்கலாம் என நினைத்தார். தன் எண் ணத்தை சொன்னார். 'தம்பியா பிள்ளே. நீரும் உடனிருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கனும் என்று கேட்டுக் கொண்டார் பெரிய பிள்ளை. 'நீங்களே ஊர் பூராவுக்கும் கடவுள் தரிசனம் பண்ணி வைப்பது எனத் துணிகிறபோது, நான் என்னாலான உதவி செய்யாமல் இருப்பேனா!' என்று சிரித்தார் பிறவிப் து. திதி ந) உஇருமாள். பால்வண்ணம் பிள்ளை திகைப்புற்றார். என்ன ஐயா கேலி பண்ணுகிறீர்! நானாவது கடவுளைக் காட்டுகிற தாவது!’ என்றார்