பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கதைகள் فيه ويَ

  • ஏழைகள், பசியோடு இருப்பவர்கள் முன்னே ஆண்டவன் சாதம் வடிவத்தில்தான் காட்சி அளிக்கிறான் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். அதைச் சொன்னேன்’’ என்று மற்றவர் தெளிவுபடுத்தினார்.

பெரிய பிள்ளையும் ரசித்துச் சிரித்தார். மழை பெய்ய வேண்டும் என்று நேர்ந்து அம்மன் கோயிலில் திருமாலைப் பூசைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஊரில் வரி வசூலித்து, சிலர் முன்னின்று நடத்தினார்கள். அன்று ஊரார் அனைவருக்கும் பால்வண்ணம் பிள்ளை வயிறாறச் சோறு போடப் போகிறார் என்ற பேச்சு பிறந்து, வேகமாகப் பரவியது. - அதைக் கேட்டவர்கள் நம்பத் தயங்கினார்கள். உண்மை தான் என்று அறிந்ததும் ஆச்சரியப்பட்டார்கள். பூசை நாள் அன்று, மத்தியான வேலையில் வசதியான இடத்தில் இலை போட்டு சாதம் பரிமாறப்பட்டது. சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசமின்றி, தெரிந்தவர், தெரியாத வர் என்று பேதம் பாராமல், பசி என்று சாப்பிட வந்த அனை வருக்கும் அருமையான விருந்து படைக்கப்பட்டது. பால் வண்ணம் பிள்ளையே முன்னின்று, குறை எதுவும் நேராத வாறு கவனித்தார். 'போதும், போதும்’ என்று நிறை வுடன் கொடுத்தாலும் போதும் என்கிற திருப்தி மறுக்கிற, வரை எல்லாம் திரும்பத் திரும்பப் பரிமாறப்பட்டன. அனைவரும் வயிறு நிறைந்த திருப்தியோடு, முகமலர்ச்சி யோடு, பிள்ளை அவர்களை வணங்கிக் கும்பிட்டு விட்டுப் போனார்கள். பார்த்தீர்களா? மனுஷனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்கிற திருப்தியே ஏற்படாது. சாப்பாடு ஒண்ணிலே