பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 வல்லிக்கண்ணன் கதைகள் ஒவ்வொரு வீட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையி னரும் சென்னை, டில்லி, பம்பாய், கல்கத்தா என்று வேலை மீது போயிருந்தார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அரேபியாவில் இருப்பதாகச் சொல்லிக் கொண், டார்கள். பெரிய வீடு' என்று பெயர்பெற்ற ஒரு இடத்தின் மகனும் மருமகளும் கல்யாணம் ஆன வருடமே அமெரிக்கா வுக்குப் பறந்துவிட்டார்கள். ஏதோ மேல் படிப்பு, ஆராய்ச்சி, என்றுதான். பையன் எம். ஈ. படித்திருந்தான். அவள் பி. எஸ்.ஸி. அவனுக்கு அவளே ‘பி. ஏ.' (P. A.). ஆனந்தக்குறிச்சியின் இளைய தலைமுறையினர் எல் லோருமே நிறையப் படித்தவர்கள். எங்கெங்கோ போய் நிறைய சம்பாத்தியம் பண்ணினார்கள். அந்த ஊர் தபாலா பீசில் தினசரி மணியார்டர்கள் வந்த வண்ணமாக இருக்கும். இருநூறு, முந்நூறு, ஐந்நூறு ரூபாய் என்று. ஊரோடு இருக்கிற பெரியவர்களுக்குத்தான். இப்போதையப் பெரியவர்களில் பலர்கூட வெளியூர்கள் எங்கெல்லாமோ போய் பணம் திரட்டியவர்கள்தான். ரங்கூன் போய்வந்து ரங்கூன் பிள்ளை' என்றாகிவிட்ட வரும், இலங்கையில் சம்பாதித்துவிட்டுத் திரும்பி கொழும்புப் பிள்ளை' என்று பெயர் பெற்றுவிட்டவரும், கல்கத்தாப் பிள்ளை ஆனவரும் அங்கே இருந்தார்கள். இப்போது வெளியிடங்களுக்கும் அயல் நாடுகளுக்கும் போயிருக்கிறவர்கள் கூட அவர்களது அறுபதாவது வயசு வா க் கி ல் இந்த ஊருக்குத்தான் திரும்பி வருவார்கள். அது நிச்சயம். அந்தக் மண்ணின் பிடிப்பு அப்படி, எங்கே போனாலும், உலகத்தைச் சுற்றி வந்தாலும், ஆனந்தக்குறிச்சி வாசிகளுக்கு அந்த ஊரைப் போன்ற அருமையான இடம் வேறு எதுவும் இல்லை என்றுதான் தோன்றும். எங்கிருந்து எவ்வளவு சம்பாத்தியம் பண்ணினாலும் சரி, கல்யாணம் பண்ணிக் கொள்ளவும்,