பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிக்கண்ணன் iO2.É. கடைசி காலத்தில் அமைதியாக இருந்து சாகவும் அந்த ஊர்க்காரர்கள் அவர்களது சொந்த ஊருக்குத்தான் வந்து சேருவார்கள். அவ்வூரின் தலைமுறை தத்துவம் அப்படிப் கட்டது. அதை மீறுவது நல்லதுக்கில்லை என்று அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். r ஒருமுறை அப்படித்தான் ஆனந்தக்குறிஞ்சிப்பெண் அறம் வளர்த்தாளுக்கு டவுனில் மாப்பிள்ளை பார்த்து, டவுனிலேயே கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். அது என்ன ஆச்சு ? ஒரு வருஷம் முடிவதற்குள்ளே அவள் அறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். புருஷன்காரன் ஏதோ காய்ச்சல் வந்து அவசரமாக அவுட் ஆயிட்டான். அறம் வளர்த்தாள் இன்னும் இருக்கிறாள். கல்லுமாதிரி அவளுக் கும் உள்ளுரிலேயே மாப்பிள்ளை பார்த்து, அங்கேயே கல் யாணத்தை முடித்திருக்க வேண்டும் என்று பெரியவங்க அப் புறமாகப் பேசிக் கொண்டார்கள். என்ன பிரயோசனம் ? காலம் கடந்த ஞானோதயம்! அதேமாதிரித்தான் நாறும்பூநாதன் என்கிற ஒருவன் வெளியூர் சுந்தரி ஒருத்திமீது மோகம் கொண்டான். அவ. ளையே கல்யாணம் செய்து கொண்டு ஆனந்தக்குறிச்சிக்கு, அழைத்து வந்தான். அவள் அடுத்த வருஷம் பிள்ளை பெறு. கிற முயற்சியிலேயே உயிரை விட்டு விட்டாள். பிறகு அந்தப் பயல் புத்தி வந்து உள்ளூர் அம்மாளுவைக் கட்டிக்கொண். டான். ஜாம் ஜாமென்று வாழ்கிறார்கள். அவனுக்கு என்ன இப்ப வயசு அறுபது க்கும் மேலேயே இருக்கும். அவளுக்கும். அம்பத்து நாலு, அம்பத்தஞ்சு இருக்கும். அந்த மண் ராசி அப்படி.