பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO5 வல்லிக்கண்ணன் கதைகள் ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் கூறுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு பெருமை. . மூக்க பிள்ளை அடிக்கடி சொல்லுவார். முன் காலத்திலே மனுசங்கங்களுக்குச் சாவு கிடையாது. எவ்வளவு வருசமானா இம் சாகாமல்தான் இருந்தாங்க. ஆனால், வயசு அதிகம் ஆக ஆக, உடல் வளர்ச்சி குறுகிச் சிறுத்துக் கிட்டே போவாங்க, அசையாமல் உட்கார்ந்திருப்பாங்க. சிறு குதிரு மாதிரி ஒரு தாழி செய்து, அதுக்குள்ளே அவங்களை வச்சு, அப்படியே ஒரு மாடக்குழியிலே வச்சிருவாங்க, தினசரி அதுக்கு விளக்கு ஏற்றி வைப்பாங்க. அப்பப்போ திங்கிறதுக்கென்று உணவுப் பண்டங்களைத் தாழிக்குள்ளே போடுவாங்க. அவங்கதான் எங்க முன்னோரு. ஆனால் காலப் போக்கிலே மதமதக்கத் தாழி வழக்கம் மறைஞ்சு போச்சு. நம்ம மனுஷங்களும் சாகக் கத்துக்கிட்டாங்க...' ஆனந்தக் குறிச்சிக்கு சில மைல்களுக்கு அப்பால்-ஆற். றின் மறுகரையை ஒட்டி உள்ள ஆதிச்சநல்லூர் பரம்புகளில், அரசு அகழ்வாராய்ச்சித் துறையினர் தோண்டிப் பார்த்து, 'முது மக்கள் தாழி’ என்கிற பழங்கால சவ அடக்க மண் பாண் டங்களையும், எலும்புகளையும், வேறு சில பொருள்களையும் கண்டெடுத்தபோது, மூக்க பிள்ளையும் மற்றவர்களும் கொக் கரித்தார்கள். நாங்க சும்மாவா சொன்னோம் பின்னே!" என்று கர்வப்பட்டுக் கொண்டார்கள். ஆனந்தக்குறிச்சி வாசிகள் மட்டும் நீண்ட காலம் வாழ முடிவது எதனால் என்று அவ்வப்போது யாராவது ஆராய்ச்சி நடத்தத்தான் செய்தார்கள். அவரவருக்குத் தோன்றிய காரணங்களைச் சொல்லவும் சொன்னார்கள். ஊர் அமைப்பு, அங்கு வீசுகிற காற்று, மக்களின் சுகவாசம், கவலையற்றநிம்மதியான-பரபரப்பில்லாத வாழ்க்கை முறை என்றார்கள்.