பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1G3 ‘இயற்கையின் அமைப்பு அப்படி. இந்த மண்ணின் மகிமை இது. எங்களுக்கு இம்மண்ணின் மீதுள்ள பிடிப்பு வலியது என்று மூக்க பிள்ளை சொன்னார். அவர்தான் அந்த ஊரிலேயே பெரியவர். அவர் பேச்சை யார் மறுப்பார் கள்? ஆனந்தக்குறிச்சி-ஆனந்தன் குறிச்சி என்பதுதான் சரி யான பெயர். அவ்வூரில் முன்னொரு காலத்தில் நூற்று ஐம்பது வருடங்கள் வசித்த ஆனந்தன் என்பவனின் நினைவை கெளரவிக்கவே இப்படி பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு, அது வெறும் குறிச்சி ஆகத்தான் இருந்தது. இது அவ்வூர் "தலபுராணம் கூறுவது-சுக வாசத்துக்கும் சோம்பல் வாழ்க் கைக்கும் ஏற்ற அருமையான இடம். அழகான ஊரும் கூட. இதர இடங்களில் எல்லாம் மக்கள் காலை ஆறு, ஆறே கால் மணிக்கே சூரியனைத் தரிசிக்க முடியும் என்றால், ஆனந்தக்குறிச்சி வாசிகள் எட்டரை அல்லது ஒன்பது மணிக் குத்தான் சூரிய தரிசனம் பெற முடியும். அதுவரை அங்கு அதிகாலை நேரம் போல்தான் இருக்கும். நிழலும் குளிரும் மங்கிய வெளிச்சமுமாக. காரணம், கிழக்கே சுமாரான மலை ஒன்று வளர்ந்து நின்றது. அது சூரியனை மறைத்துக் கொண்டு, வெகு நேரம் வரை அவ்வூருக்கு வெயில் வராதபடி தடுத்தது. மலையை ஒட்டிய ஊர். மரங்களும் செடி கொடிகளும் மிகுதியாக இருந்தன. பச்சிலைகளும் மூலிகைகளும் நிறைந்த பகுதி. அதில் தவழ்ந்து வரும் சுத்தமான காற்றை எந்நேர மும் சுவாசித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வூர் மக்கள். மேற்குப் பக்கத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஜீவநதி -அதன் தண்ணீர் ஆரோக்கியம் தரும் சக்தி பெற்றது என் பது பிரசித்தம். ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் காலையிலும்