பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 வல்லிக்கண்ணன் கதைகள் மாலையிலும் ஆற்றில் குளித்தார்கள். ஆற்று நீரையே சதா உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். மண் வளம் காரணமாக எல்லாவித பயிர்களும் செழித்து வளர்ந்து, நல்ல பலன் அளித்தன. மாடுகள், ஆடுகள் நன்கு வளர்ந்தன. ஆகவே, உணவு தானியங்கள், காய்கறி வகை கள், பால் மோர் தயிர் நெய் வெண்ணெய் ஆகியவற்றுக்குக் கவலையே கிடையாது அவர்களுக்கு. பணம் தாராளமாக வெளியிலிருந்து வந்து கொண்டிருந்ததால், இப்பொருள்களை விற்றுக் காசாக்க வேண்டிய அவசியம் அவ்வூர்க்காரர்களுக்கு ஏற்படவில்லை. ஆகவே, அவர்கள் திருப்தியாக உண்டு வளர்ந்தவர்கள். கவலை இல்லாமல் வாழ்ந்தவர்கள். இத்தகைய சூழ்நிலையில், இப்படியொரு வாழ்க்கை வசதியில், காலம் கழித்து வந்த மூக்க பிள்ளை நூறு வயசு என்ன, அதற்கும் அதிகமாகவே-உயிரோடிருக்க முடியும் என்று ஆனந்தக்குறிச்சிக்காரர்கள் நம்பினார்கள். அவரும் நம்பினார். - ஊரிலே வயசால் மூத்தவர், முதல்வர், என்று எல்லோரும் அவருக்கு மரியாதை காட்டி வந்தார்கள். நியாயமாக தனக்கு உரிய பெருமைதான் அது என்று அவரும் அதை ஏற்று வந் தார். - இது ஒரே ஒருவருக்கு மட்டும் மனக்கடுப்பு உண்டாக்கி வந்தது. அவர்தான் பாலுப் பிள்ளை என்கிற பால்வண்ண நாத பிள்ளை, ஊரில் இரண்டாவது பெரியவர் அவர்தான். மூக்க பிள்ளை இல்லாமல் போனால் இவரே முதல்வர்; மூத்த வர்; முன்னோன், சமூகத்தின், ஊரின், சகலவிதமான மரி யாதைகளும் கெளரவிப்புகளும் இவருக்கே சேரும். இப்போ அந்த சவத்துப் பய வழி மறிக்கும் நந்தியாய் குறுக்கே நிற் கானே. அவன் எப்போ மண்டையைப் போடுவான்?’ என்று இவர் எண்ணி, ஏங்கி, எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்.