பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 வல்லிக்கண்ணன் கதைகள் அந்த வீட்டுக்கு அவர் போக வேண்டிய அவசியமே ஏற் A si-sāi. மூக்க பிள்ளை பற்றியும் சிலர் அப்படிப் பேசலானார் கள். அவர் வலுத்த கட்டை. நூறு வயசைப் பார்க்காமல் போகமாட்டார்’ என்றும் சிலர் சொன்னார்கள். ‘அண்ணாச்சி வெளியே நடமாட்டமில்லை என்று தெரிந்ததும் பாலுப்பிள்ளை சந்தோஷப்பட்டார். ரொம்ப சர்வீஸ் கண்ட கறுப்புக் கோட்டை எடுத்து மாட்டிக் கொண் டார். அதேபோல் உழைத்த பச்சைப் போர்வையை மேலே போர்த்திக் கொண்டார். இந்த தோரணைகள் இல்லாமல் அவர் எவர் வீட்டுக்கும் போகமாட்டார். மருந்துகள் இருந்த செல்லத்தையும், சிவப்பு சில்க் கைக் குட்டையையும் - இதை கையில் போட்டுத்தான் நோயாளியின் நாடியைப் பிடித்துக் கணக்கிடுவார் - எடுத்துக் கொண்டு மிடுக்காகக் கிளம்பினார். மூக்க பிள்ளை வீட்டில் அறம் வளர்த்தாள் தான் அவரை வரவேற்றாள். மூக்க பிள்ளையின் மகன் வெளியூர் போய்விட்டான். மகள் கலிமானமாகி மாப்பிள்ன்ை வீட் டோடு போய்விட்டாள். பெரிய, வசதிகள் நிறைந்த, வீட்டையும் சுகமான வாழ்க்கையையும் விட்டுவிட்டு, மக ளோடு போய் இன்னொருவர் வீட்டில் காத்துக் கிடக்க விரும்பாத மூக்க பிள்ளை தன் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும், தனக்கு சகலவிதமான பணிவிடைகள் செய்யவும், பெண் துணை தேவை எனக் கருதியும், டவுனுக்கு ‘வாழ்வரசி ஆகச் சென்று குறுகிய காலத்திலேயே 'அறுதலி ஆகத் திரும்பி வந்து தனித்திருந்த அறம் வளர்த்தாளைச் சேர்த்துக் கொண்டார். அவளுக்கும் ஆம்பிளைத் துணையும் வாழ்க்கையில் உறுதியான பாது காப்பும் தேவையாக இருந்தன. ஆனந்தக்குறிச்சி வாசி