பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - # 1 O. களுக்கு இதெல்லாம் புதிய விவகாரமில்லை. அவர்கள் எதையும் 'வழுவல; காலவகையினானே' என்று ஏற்று அங்கீகரிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்களாக இருந்: தார்கள். பாலுப் பிள்ளை, என்ன அறமளத்தா, அண்ணாச்சி எப்படி இருக்காக?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே துழைந்தார். பெரியவர் இருந்த இடத்துக்கு போனார். மூக்க பிள்ளை சோர்ந்து கட்டிலில் படுத்திருந்தார். பாலுப் பிள்ளை அதையும் இதையும் பேசி, அவர் கையைப் பிடித்துப் பார்த்து ஏதோ பொடியைக் கொடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடும்படி சொன்னார். 'இது எதுக்குங்கேன்? சுக்கு வெந்நிதான் சரியான மருந்து. அதைத்தான் அறமளத்தா அப்பப்போ ஏதோ கஷாயம் வச்சுத் தாறா. அது போதும், சுக்குக்கு மிஞ்சிய டிருந்து ஏது? சுப்ரமணிய சாமிக்கு மிஞ்சிய கடவுள் ஏது?" என்று கேட்டார் மூக்கப்பிள்ளை. அது சரிதான், அது சரிதான் என்று பாலுப் பிள்ளை தலையை ஆட்டினார். அவர் வேறு ஏதேனும் சொல்லியிருப் பார். அதற்குள் அறம் இரண்டு பெரிய தம்ளர்களைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டாள். கொத்துமல்லி விதைகளை (தனியா) வறுத்துப் பொடி பண்ணி, அந்தப்பொடியைத் தண்ணீரில் கருப்புக் கட்டி யோடு கொதிக்கவைத்து பிறகு வடிகட்டி நிறையப் பாலும் சேர்த்து காப்பி' என்ற பெயரில் தயாரான பானம் அது. மணமும் சுவையும் நிறைந்த அதை ருசித்துச் சாப்பிட்டு விட்டு, சரி, அப்புறமா வாரேன். உடம்பை கவனிச்சுக் கிடுங்க அண்ணாச்சி என்று கூறி, விடைபெற்று வெளி யேறினார் பாலுப் பிள்ளை,