பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 14 காலைப் புடிக்கவும், கையைப் புடிக்கவும், உடம்பப் புடிச்சு விடவும், இஷ்டம்போல விளையாடவும். ஆற்றங்கரையிலே வாற போற இளசுகளை ஏக்கத்தோடு பாத்துக்கிட்டிருப் பேளே, அந்த ஏக்கம் தீர்ந்துபோம். ஒவ்வொருத்தியும் எப்படி இருப்பாள்ங்கிறீக லட்டு மாதிரி, மாம்பழம் மாதிரி, -அவளுக மேலேயே லட்டுகளும் மாம்பழங்களும் ஜம்னு இருக்கும். எல்லாம் உங்களுக்கேதான்...? ஆங், அப்படியா? என்று பெருமூச்செறிந்தார் பெரிய பின்னை. 'யின்னே இந்த மண்ணிலே கிடந்து காய்ந்து மெலியற. துலே ஏதாவது புண்ணியம் உண்டா? என்று அழுத்தினார். பாலுப் பிள்ளை. - அது சரி, இது மாதிரிக் கட்டிலு அங்கே உண்டுமா? ரொம்ப அருமையான கட்டில். எனக்காகச் சொல்லி, மரங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்தது: இதிலே படுத்தாலே சுகமாகத் துரக்கம் வரும்...” பெரியவரின் பேச்சைக் கேட்டதும் சப்பென்றாகிவிட்டது பாலுப் பிள்ளைக்கு. இருந்தாலும், தெம்போடு பேசினார் . 'இதென்ன கட்டிலு! இதுக்கு அப்பன், பாட்டனெல்லாம் அங்கே கிடைக்கும். சப்ரமஞ்சக் கட்டில்னு கேள்விப்பட்டது இல்லே? அது அங்கே உங்களுக்காக இருக்கு. அதுலே இளசு இளசான அழகு சுந்தரிகளோடு எப்பவும் உல்லாசமா இருக்கலாம். உங்களுக்கு...” - மூக்க பிள்ளை நிமிர்ந்து உட்கார்ந்தார். வேண்டாம் தம்பியாபுள்ளே. இந்தக் கட்டிலே எனக்குப் போதும். இதுலே சும்மா சாய்ந்திருப்பதே சொர்க்கத்திலே இருக்கிற மாதிரி சுகமாகத்தானிருக்கு!’ என்றார். .