பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 15 வல்லிக்கண்ணன் கதைகள் பாலுப் பிள்ளை அடிபட்ட புலி மாதிரி ஆங்காசத்தோடு அவரை நோக்கினார். உமக்காவது சொர்க்கமாவது நரகத் தீ தான் உமக்குக் கிடைக்கும் நீர் செய்திருக்கிற பாபங்க ளுக்கும் அட்டுழியங்களுக்கும் அங்கே தான் நீர் போகப் போlர். அந்தத் தீயிலே எரிந்து கருகப் போlரு. உம்ம கட்டிலும் உம்மகூட சேர்ந்து எரியும். அப்படித்தான் நடக்கப் போகுது... படபடப்போடு எழுந்து நின்று, ஆத்திரமாகக் கத்தி னார் : மினுமினுன்னு இருக்கிற தோதகத்திமரக் கட்டிலும், உண்டு வளர்ந்திருக்கிற தொண்ணுரத்தஞ்சு வயசுக் கட்டை யும் தீயிலே நின்று எரியும். நல்லா எரியும்...' ஆத்திரம் தணியாமல் நடக்க முற்பட்டார் பாலுப் பிள்ளை. அவரையே குறும்புப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த மூக்க பிள்ளை ஒரு சிறு வேலை செய்தார். அவர் கட்டில் பக்கத்தில் ஒரு தடி இருந்தது. நீளமான வழவழப்பான, கைத்தடி. அவர் எழுந்து வெளியே போனால், கைக்குத் தாங்கலாக இருக்கட்டும் என்று அது எப்பவும் அருகிலேயே இருந்தது. பெரிய பிள்ளை அதை எடுத்து, பாலுப் பிள்ளையின் கால் களினூடே லாவகமாக நீட்டினார். பாலுப்பிள்ளை எதையும் கவனிக்கவில்லை. அந்தி கறுத்து, இரவு கனத்துக் கொண்டி ருந்ததால் அறைக்குள் வெளிச்சம் மங்கிவிட்டது. அறம் வளர்த்தாள் இன்னும் விளக்கேற்றி வைக்கவில்லை. வேகமாக அடி எடுத்து வைத்த பாலுப்பிள்ளை, தடிக் கம்பினால் தடுக்கப்பட்டு, தவறி விழுந்தார். அவர் தலை கதவில் மோதியது. நாசி வாசல்படியில் பலமாக இடித்தது... அவர் விழுந்தவர் விழுந்தவர்தான்!