பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்சன்னன் - 1 : 6 தடிக்கம்பை மறுபடியும் வழக்கமான இடத்தில் வைத்த பிள்ளை, போ, உன் சொர்க்கத்துக்கு நீயே போய்ச் சேரு' என்று முணுமுணுத்தார். உரக்க, 'அடடா, தம்பியாபுள்ளே. என்ன இது பார்த்து நடக்க வேணாம்?’ என்று கூறி, 'அறம் அறமளத்தா! சீக்கிரம் விளக்கைக் கொண்டுவா. இப்படி வந்து பாரு!’ என்று பதட்டமாக உத்திரவிட்டார். அங்கு வந்த வெளிச்சம் பாலுப்பிள்ளையின் சோக முடிவை எடுத்துக் காட்டியது. 'சே, மனுசன் இப்படியா விழுந்து வைப்பான்! மாலைக் கண்ணுபோலிருக்கு. கதவிலே மோதி, தடுமாறிக் கீழே விழுந்திருக்கான்... கண்ணு தெரியலேண்ணா வீட்டோடு கிடக்க வேணாம்?. சரி, தெருவிலே யாராவது போறாங் களா பாரு. இவனை அப்புறப்படுத்தணுமே. வீண் வேலை வச்சிட்டானே நமக்கு!’ என்று முணுமுணுத்தார் மூக்க பிள்ளை. பாலுப் பிள்ளையின் உடல் அகற்றப்பட்ட பிறகு, மூக்க பிள்ளை குதுகலத்தோடு சுற்று முற்றும் பார்த்தார். லேசாகச் சிரித்துக் கொண்டார். அறமளத்தா! ராத்திரிக்கு பால் பாயாசம் வை. பாயசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு சாப்பிடணுமின்னு தோணுது!’ என்றார். ■

  • SarsöprőGBT råmæssir’