பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வறுமை 'அத்தையிடம் எப்ப சொல்லப் போlங்க?’ என்று கேட் டாள் மீனம்மா. பத்திரிகை பார்ப்பதில் ஆழ்ந்திருந்த சிதம்பரம், உம்ம்... சொல்ல வேண்டியது தான் என்று இழுத்தான். அதுதான் எப்போன்னு கேட்கிறேன்' என்று அவள் தன் குரலுக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். கணவனின் பிடிச்சு வச்ச களிமண் பிள்ளையார் இயல் பும், ஞஞ்ஞமிஞ்ஞப் பேச்சும் அவளுக்கு எரிச்சல் தருவது வழக் கம். இப்பவும் அப்படித்தான். சொல்ல வேண்டியதை சீக்கிரமே சொல்லி விடுவது தான் நல்லது. ஈழு-சழுன்னு இழுத்துக் கிட்டிருந்து அத் தைக்கு இன்னும் இடம் கொடுத்திராதீங்க. நாம அவளுக்கு செஞ்சிருக்கது போதும். அத்தை, கால நிலைமை சரி யில்லே; எங்க பாடே ஒவ்வொரு மாசமும் இழுபறின்னு: கிடக்கு: உன்னை வச்சு எங்களாலே இனியும் காப்பாத்த முடி யாது; நீ என்ன செய்வியோ, எங்கே போவியோ, எங்களுக்கு தெரியாது'ன்னு கட்அன்ட்ரைட்டா சொல்லிப் போட வேண்டி யது தானே?’ என்று பொரிந்து கொட்டினாள் மீனம்மா.