பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 18 சொல்லிடலாம் மீனு. ஆனா அத்தையைப் பார்க்கை யிலே பரிதாபமா இருக்கு. இந்தத் தள்ளாத வயசிலே அத்தை எங்கே போவா, என்ன பண்ணுவான்னு கவலையும் மனக் குழப்பமுமா இருக்கு...' அதுக்காக?' என்று சீறினாள் மீனம்மா. அவ அவ தலை எழுத்து. யாராரு எதெதை அனுபவிக்கனுமோ அதை அனுபவிக்காமல் தீருமா? இதுவரை அவளை நாம வச்சுக் காப்பாத்தினதே பெரிசு. நீங்க கண்டிப்பாச் சொல்லிப் போடுங்க.." தீர்மானமாய்க் கூறி விட்டு மீனம்மா தன் வேலையைக் கவனிக்க உள்ளே போனாள். . 'உம், பாவம் அத்தை...' என்று நெடு மூச்சுயிர்த்தான் சிதம்பரம். முதன் முதலில் எந்த, மருமகள்காரி மீனாட்சி அம் மாளை அன்போடும் ஆசையுடனும் அத்தை - அத்தை என்று அழைத்து மகிழ்ந்தாளோ தெரியாது; அந்த உறவு முறை அழைப்பே ஊராருக்கெல்லாம் பொதுவானதாக வழங்கி வர லாயிற்று. தலைமுறை தலைமுறையாக, மீனாட்சி அம்மாள் எல்லோருக்கும்-பெரியவர், சிறியவர், ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே-அத்தை ஆகி விட்டாள். அதுவே அவளுக்கு பெயர் மாதிரி நிலை பெற்று ஒலித்தது. . பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத் தினளாய்த் தோன்றிய அத்தை இளையளாய் மூத்திலள் கொல்லோ’ என்ற கவிதை வரிக்கு-இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையான வளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு-கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.