பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 19 வல்லிக்கண்ணன் கதைகள் சமூக அந்தஸ்து நோக்கில் ஒரு அநாதை என்று மதிக் கப்பட வேண்டிய நிலையில் இருந்த அத்தை ஒவ்வொரு கால கட்டத்தில் தன் மீது அனுதாபமும் ஓரளவு அன்பும் காட்டக் கூடிய வெவ்வேறு மருமகன், மருமகள் தயவை நம்பித்தான் சீவித்து வந்தாள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு என்று தூரத்து முறை செப்பிக் கொண்டு அவள் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று சில சில நாட்கள் தங்குவாள். வாரக் கணக்கில் முகம் சுழிக்காத நல்லவர்கள் வீட்டில் மாதக் கணக் கில் அத்தையின் முகாம் நீடிக்கும். சும்மா சொல்லக் கூடாது. அத்தை யார் வீட்டில் தங்கி யிருந்தாலும் சரி, அந்த வீட்டில் தின்கிற சோற்றுக்கு வஞ் சனை இல்லாமல் உழைப்பாள். பிரியமாய்ப் பேசிப் பழகு கிற மருமகள்மாரும், தயங்காமல் கூசாமல் அத்தையை சம்பளமில்லாத வேலைக்காரியாகப் பாவித்து சகலவிதமான அலுவல்களையும் நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கும் படி கவனித்துக் கொள்வார்கள். எந்த ஊருக்கு எவர் வீட் டுக்குப் போனாலும் இந்த நியதி மாறாமல் செயல்பட்டு வந்தது. ஒரிரு வீடுகளில் ஒரு வருஷத்துக்கு அதிகமாகத் தங்கி உழைக்கும் வாய்ப்பு அவளுக்கு அபூர்வமாகக் கிடைத்ததும் உண்டு. அவை எல்லாம் மீனாட்சி அம்மாளின் அதிர்ஷ்டக் கணக்கில் சேரும். ஒரு வீட்டில் தனக்கு கவனிப்பு குறைகிறது என்று அவளது உள்ளுணர்வு உணர்த்தத் தொடங்கிய உடனேயே அத்தை கேம்ப் கிளம்பி விடுவாள். அந்த ஊரிலே திரு விழா: இங்கே அம்மன் கோயில் கொடை. இன்னார் மிக ளுக்குக் கல்யாணம்; கல்யாண வீட்டு வேலைகள் செய் வதற்குக் கூப்பிட்டிருக்காங்க. நம்ம இவளுக்குப் வேறு கால் மாம்; துணைக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுறா பாவம்: