பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 12C. அத்தையை எங்கே பார்த்தாலும் உடனே புறப்பட்டு வரச் சொல்லுன்னு நம்ம மங்காயி மககிட்டே சொல்லி அனுப்பி யிருக்கா. பிரமுவுக்கு டைபாயிட்டி காச்சலாம், நான் போயி கூடமாட இருந்து உதவி செய்யனும் என்று பொருத்த மான ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் போவாள். 'அத்தையை எங்கே காணோம். ஸ்ர்க்கோடு போயாச் சாக்கும்? அவ காலமும் இப்படி ஒரு தினுசாக் கழிஞ்சிட்டுதே அதைச் சொல்லு!... குறைநாளையும் அத்தை இப்படியே ஒட்டி அடைச்சிருவா... அவளுக்கென்ன- கொடுத்துவச்ச மாராசி என்று மருமகள்களில் சில பேர் கருத்துப் பரி மாறிக் கொள்வதும் சகஜம்தான். இதில் ஒன்றிரண்டு, அத்தைக் காதை எட்டுவதும் இயல்பு. அதை அவள் பெரிதுபடுத்தமாட்டாள். பெரிது படுத்தி, முகத்தைத் துக்கி வைத்துக்கொண்டு திரியக் கூடிய நிலையிலா அத்தை இருந்தாள்? 'தன் மூஞ்சியைத். தானே கொண்டை முடிச்சுப் போட்டுக்கிட்டு உம்முனு. இருந்தால் அப்புறம் அவளுடைய வாழ்க்கை வண்டி ஒடு வதுதான் எப்படி? ஆகவே, எதையுமே அவள் கண்டு கொள் வதில்லை. - அத்தையின் இனிய சுபாவங்களில் முக்கியமானது. அவள் எல்லோரிடமும் அன்பு செலுத்தி வந்ததுதான். சின் னக்குழந்தைகளிடம் பிரிவும் மிகக் கொண்டவள் அவள். பெண்களிடம் பாசமும் பரிவும் காட்டினாள். ஆண்களிடம். தாய்போல் அன்பு செலுத்தினாள். இதில் அவளுக்குத் தனி, மகிழ்ச்சியும், இன்பமும் இருந்ததாகவே தோன்றியது. எனவே தான் ஊராருக்கு உழைப்பதே யோகம் என்றொரு வாழ்க்கை முறையை அத்தை மேற்கொண்டிருந்தாள் போலும்,