பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置2球 வல்லிக்கண்ணன் கதைகள் எந்த வீட்டுக்கு அவள் போனாலும், ஒருசில நாட்கள் அல்லது மாதங்கள் தங்கினாலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் போலவே அத்தை இயங்கினாள், வீட்டுக் காரி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வீடு கூட்டுவது, காய்கறி நறுக்குவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற சிறுசிறு அலுவல்களிலிருந்து பெரிய பெரிய வேலைகள் வரை. வீட்டு வேலைகள் அனைத்தையும் தானாக செய்து முடித்தாள். குழந்தைகளைக் கொஞ்சினாள். அவ்வப்போது மிட்டாய் முறுக்கு என்று ஏதாவது வாங்கிக் கொடுத்தாள். வீட்டம் மாளுக்கு எப்பவாவது இரண்டு மூன்று அல்லது ஐந்து ரூபாய் என்று கைமாத்துகொடுத்து உதவினாள். ஊர்வம்பு, கள் பேசி மருமகள்களுக்கு மன மகிழ்வும் அளித்து வந்தாள். 'வீட்டு அம்மாளுக' பணம் கொடுத்து வேலைக்காரி' அமர்த்தினால்கூட, அவள் இத்தனை அலுவல்களையும் முணுமுணுக்காமல் செய்து முடிக்கமாட்டாள். ஆகவே,எந்த வீட்டிலும் அத்தைக்குப் போடுகிற சாப்பாடு தெண்டச் செலவு என்ற கணக்கில் அடங்காது. ஆனாலும் அம்மாமகள் (பெற்றோர்-பிள்ளைகள்) உறவுகூட பணம்- சொத்துசுயநலம் - சுயலாபம் எனும் இணைப்புகளில் பிணைப் புண்டு ஊஞ்சலாடுகிற இன்றைய சமூக அமைப்பில், மீனாட்சி அம்மாள் போன்ற வெறும் நபர்களின் அன்பும் உழைப்பும் உரிய மதிப்பையும் போற்றுதலையும் பெறாமல் போவது வியப்புக்குரிய விஷயம் இல்லைதான். அவளுடைய புனிதமான அன்பு மற்றவர்களிடம் தூய அன்பை எதிரொலியாக எழுப்பத் தவறிவிடுகிற காலங்களில் அத்தை அவதியுற நேரிட்டது. அத்தைக்கு வயது ஆக ஆக மற்றவர்கள் அவளிடம் காட்டிய கவனிப்பின் மாற்றுக் குறையலாயிற்று. அதிலும்