பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 வல்லிக்கண்ணன் கதைகள் காலும் கையும் தெம்பாக இருக்கையிலேயே!’ என்ற ரீதி .யில் அவள் தன் கணவன் சிதம்பரத்திடம் புழுபுழுக்கத் தொடங்கினாள். சிதம்பரத்துக்கு அவளைவிட இளகிய உள்ளம். அத்தைக் காக இரக்கப்பட்டான். “அவள் எங்கே போவாள், பாவம் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டுமே. அத்தை அவளாலே முடிஞ்ச அளவு வேலைகளைச் செஞ்சிக்கிட்டுத்தானே இருக் கிறா?' என்று சொல்லிப் பார்த்தாள். மீனம்மா பச்சைத் தண்ணிர் பட்ட சுண்ணாம்புக் கல் லாகக் கொதித்துப் பொங்கி சூடாக வார்த்தைகளைக் கொட்டலானாள். -இப்போ அவளாலே வேலை செய்ய முடியலே. எதை யும் ஒழுங்காச்செய்றதில்லை. வேளா வேளைக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு பறக்கிறா, நெய் இல்லாம அவளுக்கு சோறு இறங்கமாட்டென்குது. தினசரி நாலஞ்சு தடவை காப்பி வேண்டியிருக்கு. அவளா போட்டுப் போட்டுக் குடிச்சிக் கிடுறா. ஒவ்வொரு தடவையும் எவ்வளவு சீனி போடுறா, தெரியுமா... இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகள்! வீட்டில் அமைதியும் சந்தோஷமும் நீடித்திருப்பதற்காக சிதம்பரம் மனைவியின் எண்ணப்படி செயல்புரியத்தான் வேண்டும். அதை நிறைவேற்றுவதில் அவன் தயக்கம் காட்டிக் கொண்டிருந்தான். அதனால்தான் இறுதி எச்சரிக்கை மாதிரி மீனம்மா அவ னிடம் பேசி விட்டுப் போனாள்.