பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வல்லிக்க்ண்ணன் கதைகள் மீது விழுந்து ஓசை எழும்பியது. படிகள் மேல் உருண்டு விழுந்ததால், அது தொடர்ந்து ஒலித்தது. என்ன என்று பார்ப்பதற்காக மீனம்மா பின்வாசல் பக்கம் போனாள். சிதம்பரமும் போனான், தாம்பாளம் கீழே விழுந்து மண்ணில் பதிந்து கிடந்தது. அத்தை தலைமீது கை வைத்தபடி மண்ணில் உட்கார்ந்திருந், தாள். அன்போடு அவள் பறித்து வந்த மல்லிகை மொக்கு. களும் கனகாம்பர மலர்களும் அவளைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. மலர்களைப் பறித்து வந்து, சரமாகக் கட்டி, அவள் குத்து, விளக்கிற்கும் சாமி படங்களுக்கும் சூட்டுவாள். ஆசையாக மீனம்மா தலையிலும் கொஞ்சம் அணிவிப்பாள். இப்போது அவளுடைய சகல ஆசைகளையும் மதிப்பற்றுப் போன அன்பையும் போல மலர்களும் மொக்குகளும் படிக்கட்டு கற்கள் மீதும் மண்ணிலும் சிதறிக் கிடந்தன. அத்தையின் கண்களிலிருந்து நீர் முத்து முத்தாக வடிந்து கொண்டிருந்தது. மீனம்மாளின் பேச்சை அத்தை கேட்டுக் கொண்டாள் என்பதை அவளது சோக நிலை புரியவைத்தது. சிதம்பரம் மவுனமாக மீனம்மாளை பார்த்தான். அவளோ கீழே விழுந்து கிடந்த தாம்பாளத்தையும் பூக்களையும் பார்த் துக் கொண்டு நின்றாள். [. "தினமணி கதிர் தீபாவளி மலர்-1981,