பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையின் சிரிப்பு அழகும் சுத்தமும் நிறைந்த அந்த அறையின் தரையில் ஒரு இடத்தில் நீர்ச் சதசதப்பும் புழுக்கைகளும் அசிங்கக் கறைகளால் பார்வையை உறுத்தின. காலையில் கண் விழித்ததும் மாதவன் பார்வையில் அது தான் முதலில் பட்டது. - சீ, என்ன அசிங்கம்! வவ்வால் வந்திருக்கு. அந்த இடத்துக்கு நேரே உயரே கட்டை வெளியை அவன் கவனித்தான். இப்போது அங்கே எதுவும் இல்லை. -ராத்திரி வந்திருக்கு. காலை வெளிச்சம் வந்ததும் பறந்தோடிப் போயிருக்கும். நல்லா விடியறதுக்கு முன்னா டியே போயிருக்கும். துடைப்பத்தை எடுத்து அந்த இடத்தைப் பெருக்கினான். புழுக்கைகளைத்தான் அள்ளி வெளியே எறிய முடிந்தது. மூத்திரக் கறை திட்டுதிட்டாக அந்த இடத்தை அசிங்கப் படுத்திக் கொண்டுதான் இருந்தது. மாதவனுக்கு சுத்தம் மிக முக்கியமான விஷயம். சூழ் நிலையை சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்வதில் அவன் அதிக அக்கறை காட்டுவான். மேஜை நாற்காலிகளை,