பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 வல்லிக்கண்ணன் கதைகள் புத்தகங்களை, பொருட்களை எல்லாம் தினந்தோறும் பலதடவைகள் துணியால் தட்டித் தட்டி தூசி போகும்படி பண்ணுவதில் கருத்தாக இருப்பான். சுவரில் தொங்கிய படங்களை சில நாட்களுக்கு ஒருமுறை துடைத்துப் பளிச்சிட வைப்பான். சிறு நூலாம்படை (ஒட்டடை) கண்ணில் பட் டால் போதும்; உடனே ஒரு கம்பை எடுத்து வந்து அதை அகற்றி விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பான். தரையில் நூலோ, காகிதத்துண்டோ, வேறு எதுவுமோ கிடந்துவிட் டாலோ அவன் மனசு சங்கடப்படும். குனிந்து அதை எடுத்து அப்புறப்படுத்தினால்தான் அமைதி அடையும். தரையில் வவ்வால் ஏற்படுத்திய அசிங்கக் கறை அவன் மனசைக் கஷ்டப்படுத்தாமல் இருக்குமா? நேரம் ஆக ஆக, ஈரம் உலர்ந்து விட்ட போதிலும், அந்த இடத்தில் வெள்ளைத் திட்டுகள், உப்பு கலிந்தது மாதிரி", பரவிக்கிடந்தன. மாதவனின் கண்கள் எதேச்சையாக அந்த இடத்தில் அவ்வப்போது மேய்ந்தன. மனம் குறுகுறுத்தது. - சீ, அசிங்கமா இருக்குதே... சனியன் புடிச்ச வவ்வால் இந்த அறைக்கு ஏன்வரனும் வேறே போக்கிடம் அதுக்கு இல்லாமலா பேச்சு? அறைக்குள் வந்து, இரவு நேரத்தை போக்கிய வவ் வாலை அவன் பார்க்கவில்லை தான். ஆனாலும் அது வவ்வால் செய்த வேலையே என்பதை அவனுக்கு அனுபவ அறிவு உறுதியாக உணர்த்தியது. சில காலங்களில் அந்த அறைக்கு எலி வருவது உண்டு. எங்கிருந்தோ நெல்லை எடுத்து வந்து, புத்தக வரிசைகளுக்கு ஊடேயுள்ள இடுக்கு களில் புகுந்து கொரித்து விட்டு, உமியைப் போட்டு வைக் கும், புளுக்கைகளும் மூத்திரமும் சிந்தி, ரொம்ப நேரத்துக்கு ஒரு வித நெடி நிலவும்படி பண்ணிவிட்டுப் போயிருக்கும். வ. - 9