பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன் 4

 வீட்டு ராமையாப் பிள்ளை இவனிடம் தயங்கித் தயங்கிப் பேசலானார் ஒரு தடவை.

காத்தலிங்கம் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, பெரிதாக ஒரு கும்பிடு போட்டான். சரிதான் ஐயா. அப்படியே செய்றேன்’ என்றான்.

அவனுக்கு என்ன தோன்றியதோ, மறுநாள் முதல் அவன் வாய்விட்டுப் பாடவேயில்லை. ஆயினும், அப்பாடா, இனி நிம்மதியாய்த் துங்கலாம் என்று எண்ணியவர்கள் ஏமாந்தார்கள். அதற்கு அடுத்த நாளிலிருந்து தெருக்களில் பலமான சீட்டி ஒலித்தது. பாட்டுகளைச் சீட்டியடித்து ஒலிபரப்பும் காத்தலிங்கம் இடைக்கிடை ‘ஹவிட்-ஹ்வீட்டோ திண்விட்' என்று சீழ்க்கை ஒலி செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான்.

"சத்தம் போட்டுப் பாடாதேயின்னு பெரிய வீட்டு ஐயா சொன்னாக. காத்தலிங்கம் நியாயத்துக்கு கட்டுப்படுகிறவன். அதனாலேதான் நான் பாடுறதையே நிறுத்திப் புட்டேன். டேய் சீட்டி அடிக்காதேடா காத்துயின்னு யாரா வது என்னிடம் சொல்ல முடியுமா? மரம் மட்டைகளுக்கு ஊடே திரிகிற காத்து கூடத்தான் சீட்டியடிக்குது. அப்புறம்? என்று அவன் நடுத்தெருவில் நின்று நியாயம் பேசினான்.

பெரிய வீட்டுப் பிள்ளை என்ன, எவருக்குமே அவனிடம் பேசி வாதாட வேண்டும் என்ற எழுச்சி ஏற்படவில்லை. போக்கிரிப் பயல் எப்படியும் போறான்னு விட வேண்டியது தான் என்று பெரியவரும் பிறரும் கருதிச் சும்மா இருந்து விட்டார்கள்.

இப்படிப் பல வாரங்கள் ஓடிவிட்டன.