பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 130. - ஆனால் இது எலியின் வேலை இல்லை. எலிப்புழுக் கைகள் இன்னும் பெரிதாய், பருமனாய் இருக்கும். எலி. ஒதுக்கிடாமல், சந்து பொந்து இண்டு இடுக்கு என்று பம்மி விருந்தது, இரை தின்று, கழித்து விட்டுப் போகும். இப்படி நட்டுநடுவிலே வெட்ட வெளியிலே தங்காது. இது வவ் வாலேதான். மறுநாளும் மூன்றாம் நாளும் மாதவன் இதையே எண். னிக் கொண்டான். - வவ்வால் ஏன் இந்த அறைக்கு வருகிறது? முன்பு திண்ணையில் ஒரு மூலையில் ஒண்டியிருப்பது வழக்கம். விடித்து பார்த்தால் வவ்வால் இராது. கீழே அசிங்கமாய் ஈரமும் புழுக்கைகளும் படர்ந்து கிடக்கும். * அதை விரட்டி அடிப்பதற்காக, உயரே விட்டத்தில் இலந்தை முள்ளை இலைகளோடு கட்டி வைத்தார்கள். வவ்வால் தொல்லை இல்லாது போயிற்று. பிறகு, தொட்டிக்கட்டில் ஒரு இடத்தில் இரண்டு வவ் வால்கள் அடைந்தன. அந்தி நேரத்திலிருந்தே பறக்கும், கொசுக்கள் பூச்சிகளைப் பிடிப்பதற்காக. இரவு ஏழு ஏழரைக் குள் விளக்குகளை அணைத்து விடுவார்கள். வவ்வால்கள் வந்து தொங்கும். யாராவது எழுந்து விளக்கைப் போட்டால், விர்ரென்று பறந்து ஒடும். விளக்கேற்றாமலே இருட்டில் அந்தப்பக்கம் போனால், வவ்வால்கள் விஷ்ஷ் - விஷ்ஷ் என்று காற்றைக் கிழித்து ஒசைப்படுத்தியபடி சுற்றியும் சுழன்றும் ஏறியும் தாழ்ந்தும் பறந்து திரிவதை சிலசமயம் அறியமுடியும். - தொட்டிக்கட்டுப் பக்கம் திறந்த வானவெளி இருக் கிறது, திண்ணையை அடுத்தும் திறந்த வெளிதான்.