பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 வல்லிக்கண்ணன் கதைகள் போல் திண்டாடியது. சுவரில் மோதி விழுந்தது. உடனே ஜிவ்வென எழுந்து எதிர்திசைக்குப் பாய்ந்தது. பெரிய பெட்டி பரப்பிய சிறுநிழலில் அது ஒண்டியது. அப்போதுதான் அந்த எண்ணம் அவனுள் வெடித்தது: இதை சாகடித்தால் என்ன?... அடித்துக் கொன்று போட லாமே! ஒரு மூலையில் சுவரோடு சுவராய் வசமாக ஒரு தலைக் கம்பு இருந்தது. ஒட்டடை அடிக்க அவன் அதை உபயோ கிப்பது உண்டு. இப்போது அது வசதியாக இருந்தது. தடியை எடுத்துக்கொண்டு அவன் வவ்வாலை நோக்கி நகர்ந்தான். அனுகுகிற ஆபத்தை உள்ளுணர்வால் உணர்ந்தது போல, வவ்வால் விர்ரென்று மேலெழுந்தது. பறந்தது. பறக்கும்போது இறக்கைகள் பெரிதாய் அதுவே அளவில் பெரிய ஜந்துவாய் காட்சி அளித்தது. குறுகிய எல்லையில், நூறு வாட்ஸ் பல்பு மிக வெளிச்சம் கொண்ட பேரொளியாய் எரிந்தது. அவ் ஒளி வவ்வாலை வெகுவாகப் பாதித்தது. அது திசை தெரியாது திண்டாடித் தவித்து அலை பாய்ந்தது. அக்குழப்பத்தால், புசை முட்டிப்போன வெறியால், தன்னை நெருங்கும் போதெல்லாம் அது தன்னைக் கடித்து விடுமோ என்றொரு உள்பயம் மாதவனை நடுக்கியது. அத னால், அதை அடிக்க வேண்டும் என்ற அவன் நினைப்பு வேகம் பெற்றது. - ஓங்கி வீசினான் தடியை.