பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 134 அடி வவ்வால் மீதுபட்டது. அது விழுந்தது. க்ரீச்-க்ரீக் என விகாரமான ஒரு ஒலி எழுப்பியவாறு அது மீண்டும் மேலே எவ்விப் பறந்தது. விழுந்தது. மேஜையின் கால் அருகே, நிழலில் கிடந்த அதை அவன் மறுபடியும் அடித்தான். அது எழுந்து, பறந்து, வெளியே செல்லக்கூடிய வழியை நாடித் தள்ளாடிக் கதவில் மோதி விழுந்தது. அசிங்கக் குவியலாய், அருவருப்பு தருவதாய் அவனுக்கு தென்பட்ட வவ்வால் மாதவனிடம் இரக்கம் எழுப்பவில்லை. அவன் தடியால் ஓங்கிக் குத்தினான். செத்தது அது. மறுபக்கத்துக் கதவைத் திறந்து, வவ்வாலை தடியால் தள்ளித் தள்ளி வெளியே ஏற்றினான். அங்கே மண் தரை. திறந்த வெளி. - கிடக்கட்டும் சவம். காலையில் எடுத்து, தெருவிலே, பாழுங்கிணற்றுள் போட்டு விடலாம். அவன் மனசில் ஒரு திருப்தியும் நிம்மதியும். முடுக்கு” பக்கம் கதவை அடைத்துத் தாளிட்டான். அறைப் பக்கக் கதவைத் திறந்தான். வவ்வாலின் புழுக்கைகளும் மூத்திரமும் அசிங்கப்படுத்தியிருந்த இடத்தைத் துடைப்பத்தால் பெருக்கி 邸赔”保仔。 - -இனி இப்படி அசிங்கமும் கறையும் ஏற்படாது. விளக்கை அனைத்து விட்டு சந்தோஷமாகப் படுத்தான். துக்கம் அவனைத் தழுவியது. எவ்வளவு நேரம் சென்றிருக் குமோ! மாதவன் திடீர் விழிப்புற்றான். கொசுக்கடி மட்டுமே காரணமல்ல. காற்றைக் கிழித்து சிறகடித்துப் பறக்கும் வவ்வால் எழுப்பும் விர்ர்-விஷ்ஷ் ஓசை தெளிவாக அவனுக்குக் கேட்டது.