பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புமிகுந்த மலர் மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச் சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம், சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார் களில், சைக்கிளில், பலரகமான வேக வாகனங்களில் நடந்: தும் கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டா ரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டி ருந்தன. அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று ரிக் சியேஷன் கிளப்' ஒன்று அமைத்திருந்தார்கள். அதற்குத் தனிக் கட்டிடம் இருந்தது. அழகான, சிறு கட்டிடம். அந்தக் கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட் டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுகளில் ஈடு பட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஒய்ந்திருப்பார்கள்