பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 138 பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காணமுடியாது. அந்த மேட்டு நிலத்தில் பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவி யல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு. சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்து கொள்ள விரும்பியவர்கள், அல்லது அவ ராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்று வரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை. இப்போது அங்கே, அந்தப் பெரிய, ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது. அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் நாக சீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானா கவே சிரித்துக் கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் உத்திரவிடுவது போலவும் பாவனைகள் செய்து கொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஆனந்தமாகத் திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலை யின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை- சுந்தரம் அச் சிறுமியை இப்படி வியந்து நின்றார். சும்மா வேடிக்கை பார்த்தார்.