பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1.40* "பயம் என்ன பயம்! என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள். - 'நீ தனியாக வந்திருக்கியே, அப்பா அம்மா உன்னை தேட மாட்டார்களா? கோபிக்க மாட்டார்களா? என்று. சுந்தரம் விசாரித்தார். "அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. தான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முத்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன்’ என்று அவள் அமைதியாகச் சொன்னாள். இது அதிசயமான குழந்தை தான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. "உன் வீடு எங்கே இருக்கு?’ என்று கேட்டார். "அதோ... அங்கே...' என்று குரலை நீட்டி இழுத்து, கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள். அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுது போக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்க முடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஒடு வேய்ந்த சின்ன வீடு, சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிட்மாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம் அதைப் பார்க்கிற போதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள்? எத்தனை காலமாக? 'நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி?’ என்று. அவர் கேட்டார். -