பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வல்லிக்கண்ணன் கதைகள் உன் மூக்கு கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு. தான் எனக்குத் தெரியலே என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவளது குமிழ் மூக்கைப் பிடித்து. ஆட்டினார். போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே’ என்றாள். பிறகு ஏதோ சிந்திப்பவள் போல் அமைதியில் மூழ்கி நின் நாள்.

  • உஷாவுக்கு என்ன திடீர் யோசனை?’ என்று சுந்தரம் கேட்டார்.

‘பூக்கள் ஜோராக இருக்கு. அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக்குட்டி தேவதைகள் போல் தோணுது. அழகாப்பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக் கூடாது? ஏன் வாடிப் போகனும்?’ என்று சீரியஸ்' ஆகவே கேட்டாள் அவள். "ஊம்ங், அப்புறம்? என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார். அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல் லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதார னம் இல்லையா?” ஆ, டீயர் பிலாசபர் இன் பாவாடை! அதாவது பாவா டையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே! நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னப்பிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல், உல்லாசமாகவே விளை யாடிக் கொண்டிரு’ என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுநதரம.