பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 146; உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரைப் பார்த்ததும் அவசரமாக வந்தாள். வாங்க, உள்ளே வாங்க என்று அழைத்தாள். உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே-சரி. யான தொணப்தெணப்பு இல்லையா? அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள். "அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண் உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம்?’ சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும்? அவருக் குக் குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன. 'உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப்பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களி டம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள். "அவர் திகைத்தார். உஷா ... உஷா எங்கே?' என்று குழறினார். அந்தப் பூ வாடிவிட்ட்து! அவள் விம்மினாள்.