பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 வல்லிக்கண்ணன் கதைகள் மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலி குந்தது சுந்தரத்துக்கு. ‘என்னது? என்ன?’ என்று கதறி னார். 'உஷாவுக்கு இருதயக் கோளாறு. ஏதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவு தான், அதனால் இருக்கிற வரை அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களா லான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள்.' அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்னே போனாள். சுந்தரம் தன் கையிலிருந்த கவரைப் பிரித்துப் பார்த் தாள். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பள்ளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதி யிருந்தாள். ஆனால் அவ்வார்த்தைகளை அனபூ - நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே - தெரிந்தேசெய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக் கொண்டார் சுந்தரம். அவர் கண்களிலிருந்து கண்ணிர்ப்பூக்கள் உதிரலாயின.

ٹیباً

“அரும்பு - ஆகஸ்ட் 1986