பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய பிள்ளை சின்னையாப் பிள்ளையை சிவபுரம் காரர்கள் பெரிய பிள்ளை என்றே குறிப்பிட்டு வந்தார்கள். சின்னையாப்பிள்ளை அந்த ஊரில் ஆக்கினைகள் செய்து வைக்கும் பெரிய தனக்கரரர் ஒன்றுமில்ல்ை. பெரிய வீட்டைச் சேர்ந்த மூத்தவரோ, வயசினால் பெருமை பெற்றவரோ இல்லை அவர். ஆள் தண்டியும் சதையுமாய் பெரியவராக இருக்கவுமில்லை. ஒல்லிதான். ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தலைமுடியை எப்பவும் சம்மர் கிராப் மாதிரி ஒட்டவெட்டி, ஒட்டிய கன்னங்களும் துருத்திய மோவாயுமாக பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் இருப்பார். சதா சளசள என்று பேசிக் கொண்டிருப்பார். எந்த விஷயமானாலும் தனது எண்ணத்தை உரத்த குரலில் ஓங்கி அடிப்பார். ஊர் பிரச்னையானாலும் சரி; தனி நபர்களின் குடும்ப விவகாரமானாலும் சரி; தனிப் பட்ட விஷயமாயினும் சரியே-எதைக் குறித்தும் யோசனை கள் சொல்லாமல் இருக்கமாட்டார் அவர். ஐடியாக்களை உலுப்பித் தள்ளுவார். திட்டங்கள், தீர்மானங்களை எல்லாம் வகுத்து, விளக்கங்களை விளாசி விடுவார். இந்த சுபாவம் தான் அவருக்கு பெரிய பிள்ளை பட்டத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று