பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 150 உயர்ந்த காளைகள், பசுமாடுகள், ஏவிய வேலைகளைச் செய்வதற்கு எடுபிடி ஆட்கள் எதுக்கும் குறைவிருந்த தில்லை. கால வேகத்தில் அவை அனைத்தும் எப்படிப் போயின என்று தெரியாத விதத்திலே பறந்தோடிப் போயின. அவரும் அவர் மனைவியும் தாராளமாக செலவு பண்ணினார்கள். இறைத்த கிணறுதான் ஊறும் , இருந்தப்பன் தின்றால் அந்தப்பன் கொடுப்பான் , செலவு பண்ணப் பண்ண செந்தூரான் தருவான்' என்று சொல்லிச் சொல்லி வாரி வழங்கினார்கள். சின்னையாப்பிள்ளை தினசரி சிவபுரத்திலிருந்து பக்கத்து டவுனுக்குப் போய் ஓட்டல்களில் உல்லாசமாகச் சாப்பிட்டும், சினிமா டிராமா என்று செலவு செய்தும் ஜாலியாக வாழ்ந்தார். அவர் தனியாகவா போவார்? கூட இரண்டு மூன்று பேர்களையும் ஜமா சேர்த்துக் கொண்டு போவார். எல்லோருக்கும் தாராள சப்ளை தான். அவர் மனைவி செல்லம்மாளோ, ஊர்ப் பெண்கள் சொன்னது போல, நெய்யிலே மிதந்த அப்பம். வடம் வருத்தம் தெரியாதவள். தினந்தோறும் அடை என்றும், வடை என்றும், மைசூர் பாகு, திரட்டுப்பால் அது இது என்றும் செய்வதில் அவளுக்குத் தனி இன்ட்ரஸ்ட் எதை யும் நெய்யிலே செய்வதில் விசேஷ உற்சாகம். ‘நான் பெற்ற இன்பம் பெறுக நம்ம தெருக்காரர்கள்!" என்ற நல்லெண்ணம் உடையவள் அவள். அதனாலே அக்கம் பக்கத்தில் வசித்த அக்காமார்கள், தங்கச்சிக்காரர்கள், அத்தை அரசிகள், மதனிகள், என்று அனைவருக்கும் வாரி வழங்கி மகிழ்ச்சி அடைந்தாள்.