பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 154 வேண்டும் என்று ஆசைப்பட்டார். கூட வருவதற்கு ஐந்தாறு வாலிபர்கள் சேர்ந்தார்கள். அருகில் இருந்த வெள்ளிமலை, நத்தம் மலை என்று ஆரம்பித்து, சில மைல்கள் நடந்து போய் பல்லிக்கோட்டை மலை, வல்லநாட்டு மலை என்றெல்லாம் ஏறி பார்த்தார்கள். அவர்களுடைய உற்சாகம் அதிகரித்தது. தூரத்துப் Quក្យ மலைகள் மீது ஏறிப் பார்ப்பது என்று திட்டம் தீட்டினார்கள் அவ்வப்போது வேன்’ அமர்த்திக் கொண்டு பயணம். திருக் குறுங்குடி மலை, களக்காட்டு மலை, மேற்கு தொடர்ச்சி மலை மீது சில இடங்கள் என்று ஏறி மகிழ்ந்தார்கள். இரவு நேரங் களை மலை மேலேயே தங்கிப் போக்குவதற்கு அவ்விடங் களில் வசதிகள் இருந்தன. அதை எல்லாம் கவனித்து, தகுந்த முன்னேற்பாடுகள் செய்வதில் சின்னையா வல்லவராக இருந் தார். அதனாலும் அவரை பெரிய ஆளுதான் என்று மற்ற ※ வர்கள் வியந்து பாராட்டினார்கள். கால ஓட்டத்தில், பெரியபிள்ளையின் போக்குகளில் மாறு தல்கள் தாமாகவே தோன்றின. சில மாதங்களுக்கு ஒருமுறை அவர் சிவபுரத்திலிருந்து காணாமல் போய் விடுவார். பல் வாரங்கள் அல்லது சில மாதங்கள் போன பிறகு திடீரென்று வந்து நிற்பார். . 'காஞ்சிபுரம் போனேன்... சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். பெங்களுர் போனேன்... மைசூர் போய் இருந்தேன்’ என்று குதூகலம் பொங்கும் குரலில் GFITకు ప్రో வார். தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக விவரிப்பார். சுவையாகச் சொல்வதற்கு ரசமான விஷயங்கள் அவரிடம் நிறையவே இருந்தன. அதனால் அவரைச் சுற்றி எப்பவும் சில பேர் காணப்படுவது வழக்கம்.