பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 156. எல்லோரும் ஏமாந்து போனார்கள் ஒருநாள். யாருமே எதிர்பார்க்காத-எதிர்பார்க்க முடியாத-ஒரு காரியத்தைச் செய்திருந்தார் பெரியபிள்ளை. திடீரென்று ஒருநாள் அவர் ஊருக்கு வந்து சேர்ந்தார். தனியாக அல்ல. கேரள நன்னாட்டிளம் பெண் ஒருத்தியும் அவருடன் ஜோடி சேர்ந்து வந்திருந்தாள். 'பெரியபிள்ளை அழகான கிளியைப் புடிச்சிட்டு வந்திருக். காரே! என்று ஊர்க்காரர்கள் அதிசயித்தார்கள். 'அறுபத்தஞ்சு-அறுபத்தாரு வயசு ஆகுதே இவனுக்கு. இந்த வயசிலே இவனுக்கு இப்படியா புத்தி போகனும்!” என்று ஊர்ப் பெரியவர்கள் அங்கலாய்த்தார்கள். அந்த அழகியை பார்த்து, பெரியபிள்ளையின் அதிர்ஷ். டத்தை எண்ணி, பெருமூச்சு விடாதவர்கள் அந்த ஊரில் யாருமே இல்லை என்று சொல்லலாம். "சின்னையாப்பிள்ளை பெரிய ஆளுதான்!” என்றே பல ரும் குறிப்பிட்டார்கள், H

  • செளராஷ்டிரமணி தீபாவளி மலர்-1988