பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59 - வல்லிக்கண்ணன் கதைகள் கன்னங்களில் குழிகுழியாக அம்மைத் தழும்புகள் படித் திருந்தன. ஆகவே, மனிதர்கள் பரிகசித்தார்கள். அவற்றின் தழும்புகள் சூட்டுக் காயங்கள் போல படித்துவிட்டன அவன் இதயத்திலே. - அவன் குள்ளமாக இருந்தான். அவன் மனமும் குள்ள மாகவே இருந்து விட்டது. நச்சுக் காற்றுடன் நகர்ந்து செல்லும் பாம்பு போல் ஊர்ந்து கொண்டிருந்தான் அவன். அவனுடைய நடை விசித்திரமாக இருந்தது. காரணம், ஒரு பாதம் கோணிக் குறுகி இருந்ததுதான். எனவே, அவன் உள்ளமும் கோணிக்குறுகி இருந்தது அங்கு கொலை குடியிருந்தது. அவன் முதுகு கொஞ்சம் கூனி இருந்தது. ஆகவோ அவன் உள்ளமும் கூனல் காட்டியது. அங்கு நேர்மைக்கு இடமே இல்லை. ஆள் நடமாட்டமற்ற ரஸ்தாக்களைக் கடந்து நடந் தான் அவன். மூலைகளையும் முடுக்குகளையும் தாண்டி, நடந்தான். அவன் நடையிலே நல்லதனம் இல்லை. அவன் உடையிலே நல்ல தன்மை இல்லை. அவன் தோற்றத்தில் நல்ல பண்பு இல்லை. அவன் எண்ணத்திலும் நல்லது கலந்திருக்கவில்லை. அவன் பார்வையிலே பட்டது- , ஒரு வீட்டுக் கதவு திறக்கப்பட்டது. ஒரு மனிதன் உள்ளே போனான். கதவு அடைக்கப்பெற்றது. நன்றாகச்