பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வல்லிக்கண்ணன் கதைகள் 'நல்ல இடம் வே. நல்ல சம்பளம் கிடைக்கும். விசேஷ நாட்களில் வேட்டி சட்டை இனாம் எல்லாம் தருவாரு. யோசிச்சுச் சொல்லும், என்று சொல்லிவிட்டு அகன்றார் பிள்ளை. - - - - 'ஹவிட்டோ ஹ்வீட்!” என்று சீட்டியடித்தான் காத்த லிங்கம். உயர்ந்த குரல் எடுத்துப் பாடலானான் : 'நல்வாக்கு, நல்வாக்கு நல்வாக்கு நீ கொடடி! பத்தினிக் கண்ணகியே, பாங்கான பெண்மயிலே!’ துரத்தி வந்த பாட்டைக் கேட்டு ராமையாப்பிள்ளை வேகமாக நடந்தார். ‘பயலுக்கு இன்னிக்கு நல்ல வேட்டை போலிருக்கு. ஏக ஜாலிதான்!” என்று அவர் மனம் முனங் கியது. ‘இவன் இங்கிருந்து ஒழிஞ்சால்தான் இந்த ஊருக் குச் சேமம். நான் சொன்ன வேலையிலே சேர்ந்து விட்டான் என்றால், எல்லாருக்குமே நல்லது என்றும் அவர் நினைத் துக் கொண்டார். ○ ඌ காத்தலிங்கம் சுற்றி அலைந்து எப்படி எப்படியோ பொழுது போக்கிய பிறகு ஒரு டீக்கடையில் சாயா அடித்து விட்டு வீடு திரும்பும் பொழுது நன்றாக விடிந்து விட்டது. காலை வெயிலின் புத்தொளி எங்கும் புது வனப்பையும் புதிய உற்சாகத்தையும் பூசிக் கொண்டிருந்தது. அவனுக்கு எதிரே சில பெண்கள் வந்து கொண்டிருந் தார்கள். வயல் வேலைக்குச் செல்கிறவர்கள். பொதுவாக, பெண்களுக்குக் காத்தலிங்கத்திடம் ஒரு பயம் உண்டு. ஆனால், விதிவிலக்காக விளங்கினாள் மீனாட்சி.