பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 1 வல்லிக்கண்ணன் கதைகள் வாருங்கள் ஐயா வாருங்கள். அகால நேரம்தான். ஆனாலும் டாக்டருக்குக் காலம், அகாலம் என்ற கணக்கு ஏது! இப்படி வந்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று பேசினார் டாக்டர். வைத்திய உதவி பெற வந்த நபரை வரவேற்பது போல் அவனை அவர் வரவேற்றார். அவன் எதிர்பாராதது அது. திகைப்புற்றான் அதனால், தன் பின்னால் யாராவது நிற்கிறார்களோ, டாக்டர் அவ ரைத்தான் வரவேற்கிறாரோ என்று ஐயுறுபவன் போல் திரும்பி நோக்கினான். அங்கு யாருமில்லை. அவன் டாக் டரை உற்றுக் கவனித்தான். டாக்டர் அவனைப் பற்றிக் கவலை கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. ப ய மே , சந்தேகமோ, வெறுப்போ- எவ்வித உணர்வுமே இருந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. தன் பாட்டுக்குத் தனது அலுவல்களில் ஈடு பட்டவர் போல் நடித்தார். எனினும் அவர் கண்காணிப்பு அவன் மீதே நிலைத்திருந்தது. அவன் அசையாது நின்றான். எரிந்து விழுந்திருந்தால், போடா வெளியே! என்று சீறி ஏச்சையும் கலந்து வீசியிருந் தால், அவன் குழம்பியிருக்கமாட்டான். அவர் மீது பாய்ந்தி ருப்பான். ஆனால் அவர் தந்த வரவேற்பு- அவர் கை யாண்ட முறைகள்- அவனுக்குப் புதியன. மோகன முறுவல் பூத்தார் டாக்டர். என்ன நண்பரே, ஏன் தயங்குகிறீர்கள்? இடம் தவறி நுழைந்து விட்டீர்களா? நீங்கள் என்னைத் தேடித்தான் வந்தீர்களோ என்று எண்ணி விட்டேன். நான் டாக்டர்.. டாக்டர் மாதவன்...” வ.-11