பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் بسیار مهمی கோட்டைக் கழற்றி ஸ்டாண்டிலே மாட்டினார். நிதான மாக நாற்காலியில் அமர்ந்து, கால்மேல் கால் போட்டுக் கொண்டு, மேஜை மீதிருந்த சிகரெட் டின்னிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். சிகரெட் எடுத்துக் கொள்ளு மேன், மிஸ்டர்!’ என்று டின்னை அவன் பக்கம் நகர்த்தினார். தன் சிகரெட்டை பற்ற வைத்து, அலட்சியமாகப் புகைக்க லானார். அவன் அசையவில்லை. வாய் திறக்கவில்லை. சலன மற்ற அவன் கண்கள் அவரையே பார்த்தன. அவரைப் பாராதது போலும் தோன்றின. உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அந்த டாக்டர் - தன்னைக் கேலி பண்ணுகிறாரா; ஏமாற்றி ஆபத்திலே மாட்டி வைப்பதற்காக இவ்வளவு இனிமையாகப் பேசுகிறாரா; அல்லது தனது உண்மைத் தன்மையை உண ராத குறையினாலேதான் உபசரிக்கிறாரா? அவனால் தீர் மானிக்க முடியவில்லை. டாக்டரின் போக்கை அவனால் புரிந்து கொள்ள இயல வில்லை. 'என் குனமும் நோக்கமும் அவருக்குப் புரியாமல் இருக்கலாம். என்னுடைய தோற்றம்? அது கூடவா அவர் கண்ணில் படவில்லை? அவர் முகத்திலே வெறுப்பு தோன்ற வில்லையே?’ அவனது மனச் சிலந்தி இப்படி எண்ண இழை ஓடவிட்டது. அவன் பெற்றிராத புதிய அனுபவம் அது. அவனைக் கண்டு, அவனது குரூரத்தைப் பார்த்து, கேலிச் சிரிப்பு சிந்து வதே மக்களின் இயல்பாக இருந்தது. சிறுவர்களும் பெரிய வர்களும் பரிகசித்து மகிழ்ந்தார்கள். சிறுபிள்ளைகளுக்கு ‘பூச்சாண்டி காட்டி பயமுறுத்தவும் அவன் உருவம்தான் துணைபுரிந்தது. அருவருப்பு தரும் பறைநாயைக் கண்டு ஒதுங்குவது போல, அவனைப் பார்த்ததும் விலகிச் சென் றார்கள் பலர். குஷ்டரோகி மீது வீசுகிற பார்வையைத்