பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத அனுபவம் சுயம்புலிங்கத்துக்கு அந்த அனுபவம் முற்றிலும் புதுமை யானதாக, விசித்திரமானதாக- ஏமாற்றமும் வேதனையும் தருவதாகக் கூட அமைந்து விட்டது. டவுனுக்கு வந்தவன், இரவை ஒரு லாட்ஜில் தங்கிக் கழிப்பதை விட, பக்கத்துச் சிற்றுாரில் வசித்த தெரிந்தவர் ஒருவரை சந்தித்து அவர் வீட்டிலேயே பொழுதைப் போக்கு வது நல்ல அனுபவமாகக் கூடும் என்று எண்ணினான். திடீ ரென்று அவர் முன்னே போய் நின்றால் ஏற்படக் கூடிய ஆச்சரியம் சந்தோஷம் முதலியவற்றை நினைக்கையில் அவனுக்கு ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டது. அவனைப் பார்த்தால் அவர் நிச்சயம் பெரும் மகிழ்ச்சி கொள்வார். வாருமய்யா, வாரும் என்று ஆவிச் சேர்த்துக் கட்டித் தன் அன்பைக் காட்டி, மரியாதையோடு வரவேற் பார். தொடர்ந்து வருகிற உபசரிப்புகளுக்குக் குறைவே இராது. ராத்திரி துரங்கவா முடியும்? படித்தவை, எழுதி யவை, புதிய புத்தகங்கள்,பழைய பத்திரிகைகள், தெரிந்தவர் கள் என்று பலப்பல விஷயங்களைப் பற்றியும் பேச்சு வளரும். அண்டை அயல் வீடுகளில் அரவம் அடங்கி, தெரு இயக்க மற்று ஒடுங்கி, ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிற இரவின் ஆழத்திலே அவர்கள் இருவருடைய குரல்கள் மட்டும் ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்.