பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 168 வெகுநேரம் காத்து நின்ற பிறகு பஸ் வந்தது. அந்த நேரத்திலும் தம்பல் சாடியது. சுயம்பு தாக்குப் பிடித்து ஏறி பஸ்சில் வசதியான ஒரு இடம் பிடித்துக் கொண்டான். அவனது மனம் அதன் இயல்புப்படி என்னென்னவோ எண்ணி, எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இருட்டுக் காலம். ஒடும் பஸ்சின் முகப்பு விளக்குகளின் ஒளி வெளிச்சமிட்டுக் காட்டிய ரோட்டுப்பகுதி தவிர்த்த ஏனைய இடவெல்லாம் இருள் போர்வை போர்த்து சுகநித்தி சையில் மூழ்கியிருந்தது. வழியில் அங்கங்கே பஸ் நின்றது. பலபேர் இறங்கி இருளோடு இருளாயினர். ஏதேதோ ஊர்கள். பகல் வேளையில் பயணம் செய்தால் என்ன ஊர், எப்படிப்பட்ட இடம் என்று தெரியும்... எல்லாம் ஊர்களே, எங்கும் மனிதர்கள்... யாதும் ஊரே, யாவரும் கேளிர் ... ஒரு திருப்பத்தில் பஸ் நின்றதும், உள்ளே இருந்தவர் களில் முக்கால்வாசிப் பேர் கீழே இறங்கிவிட்டார்கள். இரண்டு மூன்று பேர் ஏறினர். பஸ்சின் உள்விளக்கு வெளிச்சத்தில் வெறுமை பளிரெனப் புலனாயிற்று. - "இடைவழி ஊர்க் கும்பல் தான் அதிகம்னு தெரியுது. வகுளாபூஷணம் ஊருக்கு அதிகமான ஆட்கள் போகவில்லை’ என்று சுயம்புவின் மனம் குறிப்பு எழுதியது. சுயம்பு ஊரின் எல்லையில் இறங்கிக் கொண்டான். கிழக்கு நோக்கி நெளிந்து வளைந்து கிடந்த ராஸ்தாவில் பஸ் ஒடித் திரும்பி மறைந்தது.