பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 வல்லிக்கண்ணன் கதைகள் சுயம்புலிங்கத்துக்கு இப்போதுதான் பிரச்னை தலை துரக்கியது. வகுளத்தின் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? தெருப் பெயர் கூடத் தெரியாதே! 'வகுளபூஷணம், அன்பகம், சிவபுரம், மாவட்டம் இது தான் சுயம்பு அறிந்திருந்த முகவரி. அவன் அனுப்பிய தபால்கள் தவறாது போய்ச் சேர்ந்தன. பதில்களும் வந்து கொண்டிருந்தன. ஊருக்குள் வந்து இறங்கியதும்தான் நண்பரை கண்டு பிடிக்க இது போதுமான விலாசம் இல்லை என்ற உணர்வு சுயம்புவுக்கு ஏற்பட்டது. அவருக்குக் கடிதம் எழுதி விவர மாக அடையாளங்கள் தெரிந்து கொண்டு வந்திருக்க வேண் டும் என்ற எண்ணம் இப்போது சுயம்புவின் உள்ளத்தில் ஊர்த் திது. மணி 9-40 ஆகியிருந்தது, வீதிகள் வெறிச்சிட்டுக் கிடத் தன. கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை.ஊர் சுமாரானது தான். ரொம்பப் பெரிது ஒண்ணுமில்லை. கால்போன போக்கில் நடந்தான் அவன். 'இந்த ஊரில் எல்லோருமே எட்டரை, ஒன்பது மணிக்குள் தூங்கப் போய் விடுவார்கள் போலிருக்கு. ஒரு வீட்டில் கூட வெளிச்சம் தெரியலியே!” அவன் நடந்தான். ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுயம்பு அவர்கள் அருகே போனான். "யாரு? என்னா? என்று ஒருவன் அதட்டினான். அதட்ட லில் باقة சந்தேகமும் ஒருவித பயமும் கலந்து ஒலித்ததாகத் தோன்றியது. -