பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவாக்கரை அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், பாண்டிப் பயல்தானே? வெறும் உதவாக்கரை, ஒண்னுக் கும் உதவாதவன்!’ என்று. பாண்டிப்பயல் என்று பலராலும் சொல்லப்படுகிற பாண் டியனுக்கு வயது இருபத்தாறு-இருபத்தேழு இருக்கும். உடல் வளர்த்தியிலும் குறைவு இல்லை. ஆள் வாட்டசாட்ட மாக, வயதுக்குத் தக்கபடி வளர்ந்து தடித்துதான் இருந் தான். இருப்பினும் அனைவரும் அவனைப் பாண்டிப்பயல் என்று மதிப்புக் குறைவாகத்தான் குறிப்பிட்டு வந்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அப்படி ஓர் இளக்காரம் அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம். அவன் அதிகமாகப் படித்ததும் இல்லை. உள்ளுர் பள்ளிக்கூடத்தில் ஆறாவது வகுப்பு வரை படித்திருந்தான். அதுக்கு மேலே படிப்பு ஏறவில்லை என்று சொல்லி, பள்ளிக்குப் போவதை விட்டு விட்டான், வ-12