பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 173 சதா பையன்களோடேயே காணப்பட்டான் அவன். சகல வயதுப் பையன்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது. "பாண்டி அண்ணே பாண்டி அண்ணே! என்று அழைத்துக் கொண்டு அவன் பின்னாலேயே திரிந்தார்கள் ஊர்ப் பிள்ளைகள். அதற்குக் காரணம், அவர்களுக்கு ஒரு தலைவன் போல் விளங்கினான் பாண்டி. ஒவ்வொரு சீசனில் ஒவ் வொரு விளையாட்டு மவுசு பெற்றிருப்பது எங்கும் ஒரு மரபு ஆகத் திகழ்கிறது. ஒரு சமயம் கிட்டிப்புள் விளை யாட்டு சிறுவர்களால் எங்கும் ஆடப்படும். சில மாதங்கள் வானில் காற்றாடி பறக்க விடுவதில் சின்னவர்களும், அவர்களோடு சேர்ந்து பெரியவர்களும், உற்சாகம் காட்டு கிறார்கள். வேறொரு சமயம், தரையில் கட்டங்கள் கீறி, வட்டு வீசி, பாண்டி ஆடுவதில் ஆர்வம் உடையவர்கள் ஆகிறார்கள் பையன்கள். இப்படி எந்த எந்த சீசனில் எந்த விளையாட்டு முனைப் பாக ஆடப்படுகிறதோ, அதுக்கு ஏற்பாடு செய்து, பையன் களை சேர்த்துக் கொண்டு பாண்டியனும் ஆடிக்களிப்பான். ‘எருமை மாடு மாதிரி இருந்து கொண்டு இந்தத் தடியனும் சின்னப் பயல்களோடு சின்னப் பயலா குதி யாட்டம் போடுறதைப் பாரேன்!” என்று நொள்ளாப்பு கூறாத பொம்பிளைகள் அந்த ஊரில் கிடையாது. தான் உருப்படாததோடு ஊர்ப்பிள்ளைகளையும் உருப் பட விடாமல் கெடுக்கிறான் என்று பெரியவர்கள் முனு. முணுப்பது வழக்கம். "எல்லாம் அவன் அம்மா கொடுக்கிற செல்லம். உழைச்சு சம்பாதிச்சிட்டி வந்தால்தான் உனக்குச் சாப்பாடு