பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ئ வல்லிக்கண்ணன் கதைகள் ஒரு நாள் பாரு உன் காதைப் பிடிச்சி ஒரே திருகாகத் திருகிவிடுவேன். அப்புறம் நீ கம்மல் போடுறது எங்கே? குலுக்கி மினுக்குவது எப்படீன்னு பார்க்கலாமே!’ என்று. முனகினான் அவன். ~ - பின்னே என்ன? ஏதாவது வேலை பார்ப்போம், நாலு: பேரைப் போல மதிப்பாக இருப்போம்கிற எண்ணம் இல்லியே உனக்கு. சோம்பேறியாக் கிடந்த சிங்காரம் கூட வேலை பார்க்கப் போறான். பண்ணையார் எஸ்டேட்டிலே காவல் வேலை அவனுக்குக் கிடைக்குமாம். அப்புறமென்ன ! பண்ணை பங்களாவிலே இருக்கலாம். அப்புறம் டவுனி லேயே ஒரு வீடு பார்த்து...... ל ‘ஓகோ ! என்றான் காத்தலிங்கம். மீனாட்சி மேலும் சொல்ல விரும்பியதைக் கேட்கும் ஆசை இல்லாமலே நடந்: தான். அவன் மனம் கொதித்தது. சிங்காரம் பயல் எதிலும் எனக்குப் போட்டியாக முளைப்பான் போலிருக்கு. இந்தக் குட்டி மீனாட்சியிடம் நெருங்காதேடான்னு அவ லுக்குப் பாடம் போதிக்க நினைச்சிருந்தேன். அதுங்காட்டி யும், எஸ்டேட் வேலையிலும் தலையைக் காட்டுறானா பய? இந்தக் குட்டி டவுனுக்குப் போகலாம், சினிமாப் பாக்கலாம்னு கனவு காண ஆரம்பிச்சுடுமே. ஓ, இவ்வளவுக்கு ஆயிட்டுதா? என்று உறுமியது அவன் மனக் குறளி. அதன்பிறகு அவன் வீண் பொழுது போக்கவில்லை. ராமையாப் பிள்ளையைத் தேடிச் சென்றான். அவர் பண் ணையார் வீட்டுக் கணக்குப் பிள்ளையைப் பார்க்கப் போயிருக் கிறார் என்று தெரிந்ததும், அவனும் நேரே அங்குப் போனான். அங்கே பலர் இருந்தார்கள். சிங்காரமும் காணப்பட் டான். கணக்குப்பிள்ளை சிங்காரத்திடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்.