பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 வல்லிக்கண்ணன் கதைகள் அவனது சாகசத்தையோ சாமார்த்தியத்தையோ பாராட்டு வதற்கு ஒருவருக்கும் மனம் வராது. ‘தெண்டச் சோத்துத் தடிராமன்! என்ன வரத்து வாறான்! ஒரு நா இல்லாட்டா ஒரு நா பயல் ஆத்தோடு போகத் தான் போறான்’ என்று சாபம் கொடுப்பார் ஒரு பெரியவர். பக்கத்திலே நிற்கிற இன்னொரு பெரிய மனிதர், "நீரோடும் நெருப்போடும் விளையாடக் கூடாது என்பாக. இந்தக் கழுதைக்கு அது தெரியமாட்டேன்குதே. வெள்ளம் பெருகிப் போகையிலே, இது என்ன விளையாட்டு?’ என்று கடிந்து கொள்வார். எவர் பேச்சையும் பாண்டி தன் காதில் போட்டுக் கொள்வது கிடையாது அவனே அவனுக்கு ராஜா, அவனது போக்குகளே அவனுக்கு உகப்பானவை பட்டம் பறக்க விடுகிற சீசன் வந்தது பாண்டியன் விதம்விதமான காற்றாடிகள் செய்து பையன்களுக்கு உதவினான். வர்ணத் தாள்களில், வெவ் வேறு வடிவங்களில் உருவான பட்டங்கள். அவை அழகாக இருந்தன. அவை உயரே வானத்தில் எவ்வியும் தாழ்ந்தும் உயர்ந்து உயர்ந்து அசைந்தும், மிதந்தும் காட்சி அளித்த போது வசீகரமாகத் தோன்றின. பாண்டியனது திறமையைப் பாராட்ட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை வெட்டி வேலைகள் செய்வதிலே பாண்டிக்கு ஈடு இணை கிடையாது என்று தான் பலரும் பேசினார்கள். -