பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் # 34. ராத்திரி வீட்டுக்கு வந்தான். அண்ணாச்சி, மூங்கிலும் கொடியும் தயாரா இருக்குதான்னான். இருக்குன்னேன். கிளம்புங்க என்றான். கூட இரண்டு மூன்று பையன்களும் வந்தாங்க, நல்ல நிலா. பட்டப் பகல்போலே வெளிச்சம். அரச மரத்து இலைகளிலே கூட ஒரு மினு மினுப்பு. டே ப்ாண்டி, உன்னாலே முடியுமான்னு கேட்டேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்னு சொல்லி மரத்து மேலே ஏறினான். சில பையன்கள் மூங்கிலைப் பற்றிக் கொண்டு கீழ்க் கிளைகளிலே நின்னாங்க. பாண்டி மேலே போயி, மூங்கிலையும் கொடியோடு சேர்த்துப் புடிச்சிக்கிட்டு, பயம் இல்லாமே ஏறினான். அனுமாரு கெட்டுது போங்க. உச்சிக் குப் போயி, மூங்கிலை நன்றாக இறுக்கிக் கட்டிப் போட்டு, மளமளன்னு இறங்கி வந்துவிட்டான். பலே பாண்டியான்னு. தட்டிக் கொடுத்தேன்’ என்றும் அவர் விவரித்தார். ஊர் வியந்தது. ஆனாலும், அதன் வழக்கப்படி சொட்டை கூறியது. கரிமுடிஞ்சு போவான் பாண்டிப் பயல். என்தான் இந்தப் போக்கு போறானோ தெரியலே!’ என்றார் கள். 'சவத்துப் பயல் கால் தவறியோ, கிளை முறிஞ்சோ கீழே விழுந்திருந்தால் என்னத்துக்கு ஆவான்? அவன் அம் மாவுக்குப் பிள்ளைன்னு பேர் சொல்ல இருப்பானா? பிசாசுப் பயல்’ என்றார்கள். இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். அவனது துணிச்சலைப் பாராட்டி நாலு நல்ல வார்த்தை சொல்வோமே என்ற மனம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்குக்கூட இருக்க, வில்லை. அதைப்பற்றி பாண்டி கவலைப்படவில்லை. ஆனால் அண்ணாச்சியின் மனசை உறுத்தியது அது. அண்ணாச்சி