பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 வல்லிக்கண்ணன் கதைகள் சே, இவர்களை சாகவிடப்படாது. எப்படியாவது காப் பாத்தியாகணுமே என்றார் அண்ணாச்சி. ‘எப்படி அண்ணாச்சி காப்பாத்துவீங்க?’ என்று கிண்டல் தொனியில் கேட்டார் ஒருவர். அண்ணாச்சி யோசித்தார். அவர் மூலை வேலை செய் தது. கொஞ்சம் சிரமமான காரியம் தான். துணிந்தால், காப்பாத்தி விடலாம் என்றார். உறுதியான வடக்கயிறு தேவை. அதன் ஒரு துணியை ஒரு பனை மரத்தில் இறுக்கிக் கட்ட வேண்டியது. மறு முனையை மண்டத்துக்கு எடுத்துப் போய், அங்கே ஒரு கல் லில் பலமாகக் கட்ட வேண்டும். கயிறில் சகடையும், அதில் தொட்டில் மாதிரி ஒரு அமைப்பும் சேர்க்கணும். மண்டபத்து மேலே இருந்து ஒவ்வொரு ஆளாக தொட்டிலில் ஏறி வர ணும். அதுக்கு வசதியாக் கரையிலேயிலேயிருந்து தாய சகடைத் தொட்டிலை இழுக்கனும் என்று அண்ணாச்சி விளக்கினார். அதுசரி அண்ணாச்சி. இந்த பேய் பயல் வெள்ளத்திலே யாரு இங்கிருந்து வடக்கயிறை மண்டபத்துக்குக் கொண்டு சேர்க்கிறது? நடக்கக்கூடிய காரியமா? என்றார் திருவாளர் சந்தேகம். அதுதானே அண்ணாச்சி அய்டியா அபாரமானது. ஆனால் எப்படிச் செயல்படுத்துவது?’ என்று திருவாய் மலர்ந்தன. சில ஒத்து ஊதிகள். x அதைத்தான் நானும் யோசிக்கிறேன்' என்றார் அண் ணாச்சி. யோசனை எதுக்கு அண்ணாச்சி? ஊர்க்கோயிலில் இருந்து வடம், வேறே கயிறுகள், சகடை, தொட்டில் ஊஞ்