பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் í 8 & சல் எல்லாம் கொண்டு வரச் செய்யுங்க. கயிறு மண்டபம் போய்ச் சேருவதற்கு நான் ஆச்சு!’ என்று திடமான குரலில் சொன்னான் முன்னே வந்து நின்ற பாண்டியன். அண்ணாச்சியின் கண்கள் ஒளிர்ந்தன. பெருமிதத். தோடு பாண்டியைப் பார்த்தார். உன்னால முடியுமா தம்பி? என்றார். 'நான் ரெடி. சாமான்கள் வரட்டும்’ என்றான் பாண்டி. சைக்கிள்கள் பறந்தன. சாமான்கள் வந்தன. சுறு: சுறுப்பும் வேகமும் செயல் நர்த்தனம் புரிந்தன. அங்கே, உறுதியாய் நின்ற பனைமரம் ஒன்றில் இறுக்கிக் கட்டப் கட்டது வடக்கயிறின் ஒரு முனை. மறு முனையை பாண்டி தன் இடுப்பில் நன்றாகக் கட்டிக் கொண்டான். கரைக்கும் மண்டபத்துக்கும் ஒரு பர்லாங் தூரத்துக்கும் அதிகம் இருந்தது. ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடியது. பாண்டி கரை மீது மேற்கு நோக்கி சிறிது தூரம் நடத் தான். வசமான இடத்தில் தண்ணிரில் இறங்கி நீரின் போக்கோடு நீந்தினான். லாவகமாக நீந்தி முன்னேறினான்; ஒரு படையெடுப்பு மாதிரி வலிமையோடு முன்னேறிக் கொண்டிருந்தது வெள்ளம். நீரோட்டத்தின் அசைவு தெரி யாதவாறு இருந்தது. செடிகள், மரங்கள் குடிசைக் கூரை கள் போன்றவை ஓடுகிற வேகத்தைக் கொண்டே ஆறு பயங்கர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. மண்டபம் கிழித்த நீர்ப்பரப்பு வெள்ளத்தின் ஒட்ட வேகத்தை, அதன் மூர்க்கத்தை, நன்கு புலப்படுத்தியது.