பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

赏 389 வல்லிக்கண்ணன் கதைகள் 'பாண்டி போய் சேர்வானா? மண்டபத்தின் மீது ஏறி விடுவானா?” என்ற சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது. பாண்டி திறமையாக, சாதுர்யமாக நீந்தி, மண்டபத்தை அடைந்து, மேலேறி நிமிர்ந்து நின்றான். கை கூப்பி வண்ங்கினான் பலே பாண்டியா!' என்று கூவினார் கரை மீது நின்ற அண்ணாச்சி. கரவொலி வெடித்தது அங்கே. பரதேசிகள் பயபக்தியுடன் பாண்டியைக் கும்பிட்டார் கள். அவன் மளமளவெனச் செயல்புரிந்தான். சகடையில் உருளும் தொட்டில் ஊஞ்சல் வந்தது. ஒருவனை அதில் உட்கார வைத்து அனுப்பினான். மெதுமெதுவாக அது கரைக்கு இழுக்கப்பட்டது. இப்படி மேலும் இருமுறைகள் அது இயங்கி, மற்ற இரண்டு பேரையும் கரை சேர்த்தது. ‘ஊஞ்சலை அங்கேயே நிறுத்திவிட்டு, வடக்கயிறை கரைக்கு இழுத்துக் கொள்ளும்படி சொல்லுங்க!' என்று பாண்டி, மூன்றாவது பரதேசியிடம் சேதி தெரிவித்தான். ‘சாமி, நீங்க எப்படி கரை சேருவீங்க?' என்று கேட் டான் பரதேசி. பயம் அவனுள் வேலை செய்தது. “வந்தது போல் போவேன்!” என்று கூறிச் சிரித்தான் பாண்டி. மூன்றாவது ஆளும் கரை ஏறி, வடக்கயிறும் கரை சேர்ந்த பின், பாண்டியன் வெள்ளத்தில் குதித்தான். இப் போது வெள்ளத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப, கிழக்கு நோக்கி லாவகமாக நீந்தினான்.